நாரம்மல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் குழந்தைகள் மற்றும் இளம் சமூகத்தின் சமூக, கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த துறைகளை வழுவூட்டும் நோக்குடன் செயல்படுத்தப்படும் 'மகிழ்ச்சியான குடும்பம்' நிகழ்ச்சித் தொடரின் இரண்டாம் நிகழ்வானது 2023.02.14 அன்று கிவுலேகெதர ஆலயத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்காக குலியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் அலுவலககத்தின் சிறிய தொழில் வளர்ச்சி அதிகாரி திரு. ஜூட் க்ளோடியஸ் மற்றும் அம்பன்பொல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் உபதேச உத்தியோகத்தர் திரு. சுரேஷ் தரிசன குமார அவர்களினால் வள உதவி வழங்கப்பட்டது.
"மகிழ்ச்சியான குடும்பம்" நிகழ்ச்சியானது நாரம்மல பிரதேச செயலகத்தின் தலைமையில், கிவுலேகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அம்மக்களை சமூக, கலாசார, பொருளாதார, ஆன்மீகம் ஆகிய முக்கிய துறைகளில் சக்தி வாய்ந்ததாக ஆக்குவதன் நோக்குடன், "மகிழ்ச்சியான குடும்பம்" ஆரம்ப நிகழ்வானது 31.01.2023 அன்று கிவுலேகெதர பௌத்த ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இளைய மற்றும் முதியோர் சமூகம் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவின் அதிகாரிகள் உட்பட பிரதேச செயலக அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் அதீத அர்ப்பணிப்புடன் பங்குபற்றினர். அரசு உதவிகள் ஏதுமின்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது பங்குபற்றிய அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு தயாரித்து வழங்கியதுடன் நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சித் தொடரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த நிகழ்வானது 14.02.2023 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு வளங்களை வழங்கியமைக்காக மாவட்ட செயலகம் மற்றும் படுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலக ஆலோசனை உத்தியோகத்தர்களுக்கு விசேட நன்றிகள் உரித்தாகட்டும்....
நாரம்மல பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட பிராந்திய இலக்கிய கலை விழா 07.10.2022 அன்று மயூரபாத மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதான உரையை மத்திய மாகாண சபையின் பிரதம செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திரு.சமித துனுகேபொத நிகழ்த்தினார். இங்கு நாரம்மல மயூரபாதா கல்லூரியில் மாணவர்கள் சில கலாச்சார கூறுகளை முன்வைத்ததுடன் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.
பிரதேசத்தின் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், நாரம்மல பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் சந்தையானது பல தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பங்களிப்புடன் 25.11.2022 அன்று நாரம்மல சந்தையில் (புலத் பொல) சிறப்பாக நடைபெற்றது.
![]() |
|
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
நாரம்மல பிரதேச செயலகப் பிரிவில் பரந்து விரிந்து கிடக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டுக்கான பிராந்திய தொழில் முயற்சி மாநாடு நாரம்மலை பிரதேச செயலக தொழில்முனைவோர் அபிவிருத்திக் குழுவினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கியதாக 22 செப்டம்பர் 2022 நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வில் தொழில்முனைவோருக்கு சேவைகளை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலரும் கலந்துகொண்டனர்
|
|
||
![]() |
![]() |
||
![]() |
![]() |























