"மகிழ்ச்சியான குடும்பம்" நிகழ்ச்சியானது நாரம்மல பிரதேச செயலகத்தின் தலைமையில், கிவுலேகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அம்மக்களை சமூக, கலாசார, பொருளாதார, ஆன்மீகம் ஆகிய முக்கிய துறைகளில் சக்தி வாய்ந்ததாக ஆக்குவதன் நோக்குடன், "மகிழ்ச்சியான குடும்பம்" ஆரம்ப நிகழ்வானது 31.01.2023 அன்று கிவுலேகெதர பௌத்த ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இளைய மற்றும் முதியோர் சமூகம் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவின் அதிகாரிகள் உட்பட பிரதேச செயலக அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் அதீத அர்ப்பணிப்புடன் பங்குபற்றினர். அரசு உதவிகள் ஏதுமின்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது பங்குபற்றிய அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு தயாரித்து வழங்கியதுடன் நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சித் தொடரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த நிகழ்வானது 14.02.2023 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு வளங்களை வழங்கியமைக்காக மாவட்ட செயலகம் மற்றும் படுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலக ஆலோசனை உத்தியோகத்தர்களுக்கு விசேட நன்றிகள் உரித்தாகட்டும்....














