எமது நோக்கு
நட்புமிக்க செயட்பாடுகளின் ஊடாக பொதுமக்களின் நல்வாழ்வை மேன்படுத்துதலே இந்நிறுவனத்தின் நோக்காகும்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.நாரம்மல பிரதேசச் செயலகத்தின் வரலாறு
குருநாகல் மாவட்டத்தின் புறநகரான நாரம்மலை, நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதான நகரொன்றாகும். பண்டைய காலத்தில் தம்பதெனிய ஹத்பத்துவ, தம்பதெனிய உடுகஹ வடக்கு, மற்றும் தம்பதெனிய உடுகஹ மேற்கு பகுதிக்குட்பட்டிருந்த பிரதேசமாகும். தற்போது இது தம்பதெனிய தேர்தல் பிரிவிற்குட்பட்ட ஒரு பிரதேசமாகும். இப்பிரதேச செயலாளர் பிரிவு 10.944 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இப்பிரதேசம் 54 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட 144 கிராமங்களை உள்ளடக்கியிருப்பதோடு 62162 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவைச் சுற்றி பன்னல, குளியாபிடிய கிழக்கு, வீரம்புகெதர, பொல்கஹவெல போன்ற பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன.
நாரம்மல பிரதேசத்தின் வரலாற்றை நோக்கும் போது புராதணகாலத்தில் 12 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட காலிங்க மாகா ஆக்கிரமிப்பின் மூலம் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து கி.பி 1232ம் வருடம் மூன்றாம் விஜயபாகு மன்னன் தம்பதெனிய ராச்சியத்தை நிறுவினார். தம்பதெனிய மாளிகை கற்குகையினை மையப்படுத்தி அவர் தனது மாளிகை நிறுவி அப்பிரதேசத்தை தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். மேலும் அவரது முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜேயசுந்தராராமய எனும் வழிபாட்டுத் தளத்தையும் நிறுவினார்.
மூன்றாம் விஜயாகு மன்னனின் நான்கு வருட ஆட்சிக்காலம் முடிவுற்றதன் பின்னர் 1236 ஆம் ஆண்டு அவரது புத்திரர் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் இரண்டாவது மன்னராக முடிசூடுகின்றார்.
இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் ஒரு இலக்கியத் தத்துவஜானியாக விளங்கினார் அதனால் அவர் சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இவ்வகையில் கவுசிலுமின எனும் கவிதை நூலை யாத்து சமூகத்துக்கு வழங்கினார். மேலும் சித்தத் சங்கராவா, பூஜாவலியா, எலு அத்தனகுலு வான்சயா, சதர்மா ராதனவலியா போன்ற தொகுப்புக்களையும் அவர் வழங்கினார்.
பராக்கிரமபாகு மன்னர் தனது தந்தையின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு அழகான மூன்று மாடி ஆலயத்தைக் கட்டினார். அதில் புத்தரின் பல் நினைவுச்சின்னத்தையும் ஏற்படுத்தினார்
அந்த ஆலயத்துக்கு செல்லும் வழியில் நாரம்மல என்று தற்போது அறிமுகப்பட்டிருக்கும் இப்பகுதியில் இருந்து தங்க நிறத்திலான நா மலரை பறித்துச் சென்று பூஜை செய்தனர். அந்த தங்க நிறத்திலான பூவைத்தான் 'ரன் நா மலஎன்று அழைத்தனர் காலப்போக்கில் அது நா ரன் மல என்று மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து நாரம்மல என பெயர்பெற்றது.
அவ்வாலயத்தைக் கட்டி முடித்ததன் பின்னர்அதில் பூஜை செய் வதற்காகவேண்டி சிரிவர்தனபுரயில் இருந்து தம்தெனிய சிரீவிஜயசுந்தராராமய வரையில் பெரஹர ஒழுங்குசெய்யப்பட்டது. அன்று தொட்டு அவ்வாலயத்தில் இன்று வரை அது இடம்பெற்று வருகின்றது.
தம்பதெனிய இராசானிதியின் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னன் இரண்டாம் பராக்கிரபாகு ஆட்சிக்காலம் 34 வருடங்களாகும். அதன் பின்னர் கி.பி 1270 ல் அவரது மகன் நான்காம் விஜயபாகு தம்பதெனிய இராசதானியின் சிம்மாசனத்தைப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டு வருடங்களில் 1272ல் ஏற்பட்ட உள்ளக கிளர்ச்சியொன்றின் மூலம் நன்பனொருவனால் அவர் கொலை செய்யப்படுகின்றார். அதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான முதலாம் புவனேகபாகு மன்னராக முடிசூடுகின்றார்.
பௌத்தமதத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்த முதலாம் புவனேகபாஹு மன்னரின் ஆட்சியின் போது ஆர்ய சக்கரவர்த்தியின் படையெடுப்பால் கி.பி 1284 ஆம் ஆண்டில் தம்பதெனிய இராச்சியம் முடிவுக்கு வந்தது.
பிரதேச செயலார்களாக இருந்த ஒழுங்கு
| பெயர்கள் | இருந்து | வரைக்கும் |
| திரு.எஸ்.எம்.ஜெயதிலக | 1991 | 1996 |
| திரு.எம்.ஏ.எஸ்.மந்திரிரத்ன | 1996 | 1997 |
| திரு.எம்.டி.பி.தசநாயக | 1997 | 2001 |
| திரு.நிமல் கொடவலகெதர | 2001 | 2005 |
| திரு.டபிள்யூ.எம்.சி.பண்டார | 2005 | 2006 |
| திரு.எச்.எல்.ரம்யசிறி | 2006 | 2012 |
| திருமதி.எம்.ஏ.ஆர்.சுதர்ஷனி | 2012 | 2016 |
| திருமதி.எஸ்.எம்.பெத்தாவடு | 2016 | 2020 |
| திரு.எம்.ஆர்.எம்.இம்ரான் | 2020 | 2020 |
| திருமதி.டபிள்யூ.பி.சி.என்.பத்திரன | 2020 | 2023 |
| திரு.எம்.ஆர்.எம்.இம்ரான் | 2023 | இன்றுவரை |














