"பக்மஹா அசிரிய நாரம்மல 2023" 22.04.2023 அன்று நாரம்மல யூ.பி விஜய்கோன் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று, கிராமம் முழுவதும் ஓட்டம், சைக்கிள் பந்தயம், நாட்டுப்புற பாடல்கள், மல்யுத்தம், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு பந்தயம், கனாமுட்டி உடைத்தல், ஆண்றிற்கான இளவரசியை தேறிவு செய்தல், மற்றும் பல நாட்டுப்புற விளையாட்டுகள் இடம்பெற்றன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்குவது உட்பட பக்மஹா விழாவின் அனைத்து அனுசரணை நடவடிக்கைகளையும் நாரம்மல வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக சமூகம் பொறுப்பேற்றனர். கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இந்த பக்மஹா விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாரம்மல பொலிஸார், நீர் வழங்கல் சபை, பிரதேச சபை, விவசாய சேவை மையங்கள், வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேசத்தின் சகல அரச நிறுவனங்களும் இந்த பக்மஹா திருவிழாவில் கலந்துகொண்டனர்.














